என் உயிர்நாடியில் முத்தமிடும்
உன் சிரிப்பினில் விழிக்கும் என் கண்கள்
நிஜத்தில் உன் வெறுமை மட்டுமே கண்களை நீரால் நிறைக்க..
என்றோ நீ அனுப்பிய வார்த்தைகள்..
நீயும் ஓரு நாள் பிரிவினில் என்னை தேடி இருக்கிறாய் என்ற
கடந்த காலத்தின் நிஜத்தில் நிகழ்காலத்தை கழிக்கிறேன் நான்..